Tuesday, April 10, 2012

‘ 3 ‘ சிறகு இரவிச்சந்திரன்


ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘


தனுஷ், சுருதிஹாசன், சுந்தர் இவர்கள்தான் அந்த 3. கதைப்படி ராம், ஜனனி, செந்தில். முதலில் படத்தைப் பற்றிய நல்ல விசயங்களை, அவை கொஞ்சம் தான் எனினும் சொல்லிவிடுகிறேன்.
இப்போதைய படங்களில், பழைய காலம் போல் எந்தப் பின்கதையும் இல்லாத பாத்திரங்கள். இதிலும் அதே அதே. தனுஷ், சுருதி, சுந்தர் – மூவரின் பண்பட்ட நடிப்பு. அப்பழுக்கில்லாத கேமரா கோணங்கள். நல்ல இசை, பாடல்கள். ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு.
இவ்வளவு இருக்கிறதே, போதாதா என்று நீங்கள் கேட்பது, கேட்கிறது. வைரம் என்று தெரியாத பழங்குடி, அதை இஞ்சி நசுக்க பயன்படுத்திய கதைதான். அத்தனையும் வேஸ்ட்.

Sunday, April 8, 2012

3 நெல்லை நண்பன்


3 படம் பார்த்தவர்கள் கட்டாயம் இந்த விமர்சனத்தை பார்க்க வேண்டும்.
http://nellainanban.blogspot.in/2012/03/3.html

Saturday, April 7, 2012

3 – திரைவிமர்சனம்


by கிரி on March 30, 2012

ரே ஒரு பாடல் “3″ படத்தை பைசா செலவில்லாமல் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி விட்டது. அதற்கு தகுந்த மாதிரி ஆளாளுக்கு படத்தின் விலையை ஏற்றிவிட்டு பரபரப்பை கூட்டி விட்டார்கள். படம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை முடிந்த வரை என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் கூற முயற்சிக்கிறேன்.
கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

'3' - எனது பார்வையில். எப்பூடி.....


'3' - எனது பார்வையில்..


கஸ்தூரிராஜா தனுஷ் கூட்டுத் தயாரிப்பில்; தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுபிரகாஷ், பானுபிரியா, ரோஹினி, சுந்தர், சிவகார்த்திகேயன் நடிப்பில்; அனிருத்தின் இசையில் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவில்; ஐஸ்வர்யா.R.தனுஷ் இயக்கிய திரைப்படம்தான் '3'. கொலைவெறி பாடல் மூலம் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்த '3' திரைப்படம் அதன் எதிர்பார்ப்பை வர்த்தக ரீதியாக பூர்த்தி செய்யுமோ இல்லையோ ஒரு அழகிய திரைப்படமாக பூர்த்தி செய்துள்ளது. 

3 - ஆவணம்


டைம்ஸ் ஆப் இந்தியாவில்  வந்த ஆகா ஓகோ விமர்சனத்தைப் படித்து காண்டாகிதான் இந்த விமர்சனத்தை எழுதுகிறேன்.  உலகம் முழுவதும் பிரபலமான கொலைவெறிப் பாடல், ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கம், தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பு என பலத்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய படம். ஆனால் நாங்க அவ்வளவு ஒர்த் இல்லப்பா! என்று மேற்கண்ட அனைவரும் கோரசாக சொல்லியிருக்கின்றனர்  இந்த படத்தின் மூலம்.

3 வெளியூர்க்காரன்


துடைச்சு வெச்ச ஐபோன் மாதிரி ஸ்ருதி...ஸ்க்ராச் ஆன நோக்கியா போன் மாதிரி தனுஷ்..!! என்னடா இது ஜோடி பொருத்தம் சரக்குல மோர மிக்ஸ் பண்ண மாதிரி மிக்சிங் சரியில்லேன்னு ஒரு டவுட்டோடதான் போய் உக்காந்தேன்...!! பயபுள்ளைக இது ரெண்டுக்கும் இடைல நெட்வொர்க் அப்புடித்தான் எடுத்துருக்கு...இந்த கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரிம்பாங்களே...இது ரெண்டுக்கும் அதுல ஆரம்பிச்சு மைக்ரோபயலாஜி வரைக்கும் வொர்க்அவுட் ஆய்ருக்கு...

Thursday, April 5, 2012

3 - சினிமா விமர்சனம்




என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைப்படங்கள் பலவும் புஸ்ஸாகிப் போவதுதான் தமிழ்ச் சினிமாவின் நடைமுறை. இந்த நடைமுறையையே இப்போது புஸ்ஸாக்கியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா..! தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றுவிட்டார்..

சாதாரண சினிமா பாடல் ஒன்று 3 லட்சம் பேரால் பார்க்கப்படும் அளவுக்கு பேசப்படும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கிடைத்ததை சர்வ நிச்சயமாக பயன்படுத்திக் கொண்டது 3 டீம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்..!

Monday, April 2, 2012

இன்னொரு சக்கரகட்டி ........3

தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்கிற வாசகங்களோடு படம் முடிகிறது. ஐஸ்வர்யா தனுஷின் கருணையே கருணை. அவர் எடுத்திருக்கிற கொடூரமான மொக்கைப் படத்தை பார்த்து யாரும் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்கிற அன்பை நாம் பாராட்டியே தீரவேண்டும். ரஜினியின் மகள் அல்லவா? அவருடைய அன்பில் கருணையுள்ளத்தில் பாதியாவது இருக்காதா பின்னே!