by
on March 30, 2012
கதை என்னவென்றால் தனுஷ் ஒரு அந்நியன் சந்திரமுகி
போல மல்ட்டி பர்சனாலிட்டி டிசார்டர் நோயால் தான் பெரியவன் ஆன பிறகு
பாதிக்கப்படுகிறார் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார் இறுதியில் என்ன ஆகிறது
என்பதே கதை.
இந்தப்படம் எனக்கு மயக்கம் என்ன தனுஷை நினைவுபடுத்தியது. இயக்குனர்
ஐஸ்வர்யா செல்வராகவனிடம் துணை இயக்குனராக பணி புரிந்து பின் இயக்குனராகி
இருக்கிறார். அவருடைய பாதிப்பு படம் நெடுக உள்ளது க்ளைமாக்ஸ் வரை. துள்ளுவதோ இளமை
படத்தையும் மயக்கம் என்ன படத்தையும் கலந்து கட்டி அடித்தது போல உள்ளது.
முதல் பாதி முழுவதும் இவர்கள் இருவர் பள்ளிக்காதலே
வருகிறது முக்கியத்திருப்பங்கள் எதுவுமில்லாமல் நகர்கிறது. தனுஷுக்கு இந்த
கதாப்பாத்திரம் சொல்லவே தேவையில்லை அடி தூள் கிளப்புகிறார். இவருக்கு துணை சிவ
கார்த்திகேயன், டைமிங் காமெடியில் கலக்குகிறார். அவ்வப்போது சந்தானம் நினைவுக்கு
வருவதை தவிர்க்க முடியவில்லை. தனுஷும் ஸ்ருதியும் பள்ளி மாணவர்கள் என்பதை எந்தவித
சிரமுமில்லாமல் ஏற்க அவர்களது உடல்வாகு உதவுகிறது. ஸ்ருதி கதாப்பாத்திரத்தில்
முன்பு வந்தவர் அமலா பால் பின்னர் எதோ கால்ஷீட் பிரச்சனை என்று அவர் இல்லை. அவர்
இருந்து இருந்தாலும் பள்ளி சார்ந்த காட்சிகளுக்கு பொருத்தமாக இருந்து இருப்பாரா
என்று தெரியவில்லை.
ஸ்ருதியை சைட் அடிக்க தனுஷ் செய்யும் சேட்டைகள்
ரசிக்கும் படி இருக்கும் உடன் சிவ கார்த்திகேயன். இவரை இடைவேளைக்குப் பிறகு கழட்டி
விட்டுவிட்டார்கள் ஆனால் இருக்கும் வரை திரையரங்கம் கலகலத்துக்கொண்டே இருந்தது.
ஸ்ருதி நண்பியாக ஜோடி நம்பர் 1 ல் ஆடிய நேபாளி பெண் என்று நினைக்கிறேன். பார்த்தால்
அவர் மாதிரி தான் இருந்தார். ஸ்ருதி தங்கச்சியாக வரும் சிறுமி செய்யும் கை அசைவுகள்
ரசிக்கும் படி இருக்கும்.
உலகத்திலேயே யாருமே செய்து
இராத இடத்தில் தனுஷ் ஸ்ருதி திருமணம் நடக்கிறது. இந்தக்காட்சிக்காக எத்தனை பேர்
திட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினி பொண்ணு இயக்கம் என்பதால்
தலைவருக்கும் சேர்ந்து திட்டு விழப்போகிறது ஒய் திஸ் கொலவெறி என்று தெரியவில்லை. ஸ்ருதியின்
திருமணத்தை ஏற்க மறுக்கும் அவரது தந்தையிடம் தனுஷ் பேசும் காட்சிகள் அருமை. ரொம்ப
எதார்த்தமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. அதே போல அவர்கள் தனுஷ் வீட்டிற்கு வரும்
போது தனுஷ் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் அசத்தல் ரகம். ஸ்ருதியின் அம்மாவாக
ரோகிணி.
பாடல்கள் எல்லாம் ஏற்கனவே மெகா ஹிட் ஆகி விட்டதால்
படத்திலும் பார்க்க நன்றாகவே இருந்தது. கொலவெறி பாடல் எடுக்கப்பட்ட விதம் ரொம்ப
சுமாராக இருந்தது. நான் எதிர்பார்த்தது தான்.
தனக்கு இந்தப் நோய் உள்ளது என்று தெரிய வரும் போது
அவரது நண்பரிடம் (மயக்கம் என்ன படத்தில் நண்பராக வருபவர்) கூறி அழுவது, தன்
நண்பனையே அடித்து விட்டு பின் அதற்காக வருந்துவது என்று தனுஷ் நடிக்க பல
வாய்ப்புகள். மச்சான்! நான் பைத்தியமாடா! என்று அப்பாவியாகக் கேட்டு கலங்க வைத்து
விடுகிறார். தனுஷுக்கு உள்ள பிரச்னையை அவர் நண்பர் மட்டுமே அறிந்து இருக்கிறார்
என்பதை நம்ப சிரமமாக உள்ளது.
தனுஷ் தன்னுடைய பிரச்னையை ஸ்ருதிக்கு தெரியாமலே
சமாளிப்பது என்பதும் நம்பும் படி இல்லை. ஸ்ருதி அழுவதைப் பார்க்க கொடுமையாக
இருக்கிறது ஆனால் அவரது துரதிர்ஷ்டம் அவருக்கு அது போன்ற காட்சிகள் அதிகம் என்பது
தான். அவர் அழும் போது நாம் நெளிய வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில காட்சிகளை
குறைத்து இருக்கலாம் இந்தக்காட்சிகளுக்கு திரையரங்கில் பலர் பொறுமை
இழப்பார்கள்.
தனுஷ் அப்பாவாக பிரபு
அம்மாவாக பானுப்ரியா. பிரபு தனுஷிடம் டேய்! நல்லா சாப்பிடுடா உன்னைப் பார்த்தால்
யாராவது என்னோட பையன் என்று சொல்லுவாங்களா! என்று நாம் கேட்க நினைத்ததை அவர் கூறி
நமக்கு வேலையில்லாமல் செய்து விட்டார்
முகத்தில் கோபத்தை டெர்ரராக காட்டுவதில் ரஜினிக்கு
பிறகு நான் தனுஷ் ரசிகன் ஆகி விட்டேன். அடேங்கப்பா! என்ன மிரட்டு மிரட்டுகிறார்
மயக்கம் என்ன படத்திலேயே கலக்கி இருப்பார் இதிலும் அதே போல் பல வாய்ப்புகள்.
அதிலும் ஒரு சண்டைக் காட்சியில் அவர் அடிக்கும் அடிகள் காட்டும் முக பாவனைகள்
சரவெடி தான். அந்தக் காட்சியில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார்.
படத்தில் சைக்கலாஜிக்கலாக பல காட்சிகள் வருவதால்
அதை எல்லாம் ரசிக்கும் அளவிற்கு நம் மக்களுக்கு பொறுமை இருக்குமா என்பது சந்தேகம்
தான். B C சென்டர்களில் ஆதரவு குறைவாகத்தான் இருக்கும். தனுஷ் இது போல ஒரே மாதிரி
படங்களாக நடிக்கும் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வது நல்லது.
3 என்பதற்கு அர்த்தம் பள்ளி, கல்லூரி, திருமணம் ஆன
பிறகு என்று மூன்று காலங்கள் வருவதால் இருக்கும் என்று நானே முடிவு செய்து
கொண்டேன். வேறு எதுவும் காரணம் தோன்றவில்லை.
படம் டக்கென்று முடிந்து விட்டது பலர் படம் இன்னும்
தொடரும் என்று நினைத்தார்கள் நான் உட்பட. மயக்கம் என்ன கூட அப்படித்தான் முடியும்
ஆனால் அதில் ஒரு அழகு இருந்தது அதற்கே பலர் திட்டினார்கள் இதற்கு!!… படத்திற்கு
ரிப்பீட் ஆடியன்ஸ் இருக்க மாட்டார்கள். எனவே படம் ஹைப்பால் ஓபனிங்கில் வசூல்
பார்க்கலாம் மற்றபடி ஓகே ரகம் தான்.
http://www.giriblog.com/2012/03/3-movie-review.html
http://www.giriblog.com/2012/03/3-movie-review.html
No comments:
Post a Comment