Saturday, March 31, 2012

3 விமர்சனம்

           எங்க ஊரில் 3 இன்னும் வெளியிடப்படவில்லை. வெளியூருக்கு போய் எல்லாம் படம் பார்த்து விமர்சனம் எழுதவும் மனம் இல்லை. எனினும் 3 படத்துக்கு விமர்சனம் எழுதாத பிளாக் என்று பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக இதை காப்பி பேஸ்ட் செய்துள்ளேன். 
            இவர் விமர்சனம் சரியா-? உங்கள் விமர்சனம் தேவை. கல்லெறிவதாய் இருந்தால் என் மீதும், பூவைச் சொரிவது என்றால் திரு. உலகநாதன் மட்டும் ப்ளீஸ்.

வெள்ளிக்கிழமை மாலை வரை சனிக்கிழமையை எப்படி சந்தோசமாக கழிப்பது என்பதில் எங்களிடம் மூன்றுவிதமான திட்டங்கள் இருந்தது. பக்கத்தில் உள்ள பீச் ரிசார்ட்டில் ஒரு நாள் தங்குவது அல்லது போர்ட்டுக்கு சென்று கப்பலில் மூன்று மணி நேரம் கழிப்பது அல்லது 'மூன்று' படத்திற்கு செல்வது. வழக்கம் போல பிள்ளைகள் 'மூன்று' படம் செல்லலாம் என்றார்கள். நெட்டில் முன்பதிவு செய்யலாம் என்று முடிவெடுத்து பார்த்தபோது மொத்தமே மூன்று காட்சிகள்தான் இருந்தது. சரி படம் அவ்வளவுதான் என நினைத்து பீச் ரிசார்ட் செல்லலாம் என நினைத்து தூங்கிவிட்டோம்.

காலையில் லேட்டாக எழுந்து வந்தால் வீட்டில், "ஏங்க படம் இன்று உண்டு போல. இப்போதுதான் நெட்டில் பார்த்தேன். போலாமா?"

பின் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அடுத்த ஒரு மணிநேரத்தில் கிளம்பினோம். போகும் வழியில் போலிஸ் செக்கிங். அதனால அரை மணி நேர தாமதம். அப்போதே ஏதோ மனதில் பட்டது. இருந்தாலும் ஒரு தைரியத்தில் படத்திற்கு சென்றுவிட்டோம். என் 15 வருட மலேசிய வாழ்க்கையில் தலைவர் சூப்பர் ஸ்டார் படத்திற்கு பிறகு நேற்றுத்தான் அத்தனை கூட்டத்தைப் பார்த்தேன். ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும், டிக்கெட்டை கவுண்டரில் பெற அரை மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.

படம் ஆரம்பித்தது. தனுஷ் எனக்கு ஓரளவு பிடிக்கும். ஸ்ருதி அவ்வ்வ்வ்வ்வ். அதிலும் மக்கள் எல்லாம் அவரின் நடிப்பை பற்றி ஓரளவு நன்றாக எழுதியிருந்ததால் நானும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு துளி கூட பிடிக்கவில்லை. ம்ம்ம்ம். அரத பழைய கதை. முதல் பார்வையில் காதல் ஏற்பட்டு, பள்ளியில் காதலித்து, பின் கல்லூரியிலும் காதலித்து பெற்றோர்கள் சம்மதிக்காததால், பாரில்(?) திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் தனுஷ்க்கு ஏதோ ஒரு வீணாப்போன நோய் வந்து ஸ்ருதியிடம் சொல்ல விரும்பாமல், முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்.

இடைவேளை வரை படத்தை தாங்கி பிடிப்பது சிவ கார்த்திகேயன்தான். அவர் எங்கே பேர் வாங்கி விடுவாரோ என்று பயந்து அவரை இடைவேளைக்குப் பின் சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டார்கள். சிவ கார்த்திகேயன் மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. காமடி நடிகரா அல்லது ஹீரோவா??

பள்ளிக்காதல் வரை ஓக்கே. அதன் பின் வரும் கல்லூரிக்காதல் எல்லாம் ஏதோ அவசரகதியில் இருக்கிறது. ஒரு சாதாரண குடியிருப்பில் வாழும் ஸ்ருதியின் உடைகள் அவ்வளவு பணக்காரத்தனமாகவா இருக்கும்? எந்த நடுத்தரவர்க்கத்துப் பெண் பாருக்கு சென்று தண்ணி அடிக்கிறாள். இவர்கள் பாரில் கல்யாணம் செய்து கொள்வார்களாம்? பின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்களாம்?

ஸ்ருதி வாயை தொறந்தாலே கோபம் கோபமாக வருகிறது. அவர் அழுவதை பார்க்க சகிக்க முடியவில்லை. ஸ்ருதி என்னதான் கவர்ச்சியாக உடை உடுத்தி வந்தாலும் பார்க்க கொடுமையாக இருக்கிறது. ஒரு ஹீரோயினுக்கு உரிய எந்த தகுதியும் இல்லாத ஒரு நடிகை. அதை உணர்ந்துதான் ஐஸ்வர்யாவே சிவ கார்த்திகேயன் மூலமாக இப்படி ஒரு வசனம் வைத்திருக்கிறார் போல-

"ஒண்னும் பெரிசா இல்லைடா?"

தனுஷ் பிரபுவிடம் பேசுவது ரசிக்கும்படியாக இருந்தாலும், ஒரே மாதிரி மூன்று சந்தர்ப்பங்களில் பேசுவது எரிச்சலாகிறது. அதில் ஒரு வசனம் வரும்,

"மொக்கைப் போடாதப்பா!"

இதை தனுஷ் ஐஸ்வர்யாவை பார்த்து சொல்லி இருக்க வேண்டும்.

இன்னொரு வசனம், "அப்புறம் எப்படி சினிமா மாதிரி ஒரே பாட்டுல நான் கோடிஸ்வரனாக முடியுமா?"

அப்படி நினைச்சுத்தானே கொலை வெறிப்பாட்டை அந்த அளவிற்கு பிரபலபடுத்துனீங்க!

கொலைவெறி பாட்டுக்கு ஏகப்பட்ட டான்ஸ் வெர்ஷன் யூடியூப்ல இருக்கு. அதுல ஏதாவது ஒரு டான்ஸை போட்டு இருக்கலாம். படத்துல இருக்க டான்ஸை பார்க்க சகிக்கல.

இடைவேளைக்கு அப்புறம் உட்கார முடியவில்லை. அவ்வளவு மோசமான திரைக்கதை. இப்படியே பைத்தியக்காரத்தனமா இன்னும் மூன்று படம் நடித்தால் தனுஷ் அவ்வளவுதான். நல்ல நடிகர். அருமையா நடிச்சிருக்கார்னு இந்த முறை நான் சொல்ல விருமபலை. ஏன்னா ஏற்கனவே கண்டு கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படங்களிலேயே சொல்லியாகிவிட்டது.

படத்தின் ஆரம்ப சீனிலேயே தனுஷின் இறப்பை காண்பிப்பதால், படத்தின் கிளைமாக்ஸ் காமடி ஆகிவிட்டது. சோகத்தை வர வழைக்க கூடிய அந்த மரணம், தனுஷ் கத்தியை எடுத்து மீண்டும் வைக்கையில் ஜோக்காகிப் போய் மொத்த தியேட்டரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது.

தியேட்டரில் உள்ள அனைவருமே, "சீக்கிரம் செத்து தொலைடா" என்று சொல்வதை என் காதார கேட்டேன். டெக்னிக்கலாக பார்த்தோமானால், ஒளிப்பதிவு சுமார் என்றுதான் சொல்வேன். பின்னனி இசையும் அவ்வளவாக என்னைக் கவரவில்லை.

செல்வராகவன் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரும் பைத்தியக்கார மன நிலையிலிருந்து தப்பி வந்து ஒரு நல்ல ஆரோக்கியமான படம் எடுக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 

இப்படிப்பட்ட படத்தை கொடுத்துவிட்டு எப்படித்தான் வெள்ளி இரவு சன் மியூசிக்கில் படம் வெற்றி என்று வாய் கூசாமல் பொய் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

படம் முடிந்து வீட்டிற்கு கிளம்பினால் கடுமையான டிராபிக். கார் இஞ்ச் இஞ்சாக நகர்ந்து வீட்டிற்கு வந்து சேர மூன்றரை மணி நேரம் ஆனது. கடுமையான் டிராபிக். இங்கே அங்கே நகர முடியவில்லை. கோபத்தில் ஸ்டிரியங்கை ஓங்கி அடித்தேன். வீட்டில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். பின் தான் படத்தின் பாதிப்பு என்று தெரிந்தது.

என் வாழ்நாளின் ஒரு நாள் நேற்று மிக மோசமாக கழிந்தது.
                                                                                                            http://www.iniyavan.com/2012/04/blog-post.html

No comments:

Post a Comment