தமிழ் திரையுலகில் கரகாட்டகாரன் படம் வெளி வந்தபின ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகளை போல பல மடங்கு அதிர்வுகளை ஒரு பாடலின் மூலம் ‘3’ திரைப்படம் ஏற்படுத்தி வருகிறது.
ஐஸ்வர்யா ஒரு பேட்டியில் ஸ்ருதிகாசனை மனதில் வைத்து இந்த திரைக்கதை அமைக்கப்பட்டதாக கூறினார். ஆனால் உண்மையில் இப்படம் சம்பந்தமாக நடந்த முதல் பிரஸ்மீட்டில் அமலா பால் தான் தனுஸ்க்கு ஜோடி என அறிமுகப்படுத்தப்பட்டார். அதில் ஐஸ்வர்யா வும் கலந்து கொண்டார்.
‘3’ படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட உள்ளது.
இந்தி படத்திற்கான உரிமைக்கான விலை கூட ரெக்கார்டு பிரேக் என்கிறார்கள்.
‘3’ குறும்படமாக தயாரிக்க எண்ணி ஆரம்பிக்கபட்டது. பின் முழு நீள திரைப்படமாயிற்று.
தனுஸ் முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். ஒரு வாரம் கழித்து கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார்.
கொலவெறி பாடல் 50 மில்லியன் நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. உலகின் பலமொழிகளிலும் இந்த பாடல் இமிடேட் பண்ணப்பட்டுள்ளது. ஏன் பாகிஸ்தானில் கூட கொலவெறி பாடல் பேமஸ். இது உலக அளவில் பெரும் சாதனை.
எனினும் இந்த பாடலை எழுதி பாடிய தனுஸ்ஸை பொறுத்தவரை புகழ் மட்டுமே கிடைத்தது. மணி நகி. ஆமாம், சோனி மியூசிக் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு இதன் உரிமையை பெற்றுள்ளது.
தனுஸ் எழுதி பாடிய கொலவெறி பாடலுக்கு அவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் ஆறு நிமிடங்கள் மட்டுமே.
‘டைம்’ இதழில் கூட இந்த பாடலை பற்றி ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.
இந்த படத்திற்கு தமிழில் 400 பிரிண்ட் மற்றும் இந்தியில் 600 பிரிண்ட் போடப்பட்டுள்ளது.
இப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை 50 நாட்களில் தயாரித்துள்ளார்.
No comments:
Post a Comment